rc@humanlink.lk +94 67 5677714 -5

கடந்த ஏப்ரல் 27ம் திகதி எமது சிறுவர் வளப்படுத்தல் வளாகத்தில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் சிறப்புற நிறைவுபெற்றன.

2024-04-27 | admin




1. மூன்று மாதத்துக்கொருமுறை நடைபெறும் எமது நிர்வாக சபை கூட்டம் தவிசாளர் அஷ் ஷெய்ஹ் ஹசன் ஸியாத் தலமையில் 12 உறுப்பினர்களின் பங்கேற்றலுடன் காலை 9 மணி முதல் பகல் 2மணிவரை நடைபெற்றது. இதில் கடந்த ஜனவரி - மார்ச் 2024 வரையான வளர்ச்சி மீளாய்வும். அடுத்த 3 மாதத்துக்கான திட்டமிடலும் செவ்வனே நிறைவேற்றப்பட்டன.

>>>


2. Stakeholder Meeting - மருதமுனையிலுள்ள அனைத்து பள்ளிவாசல், பாடசாலை, சமூக அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், ஜம்மியத்துல் உலமா, அரபுக் கல்லூரி, சமூக தொண்டு நிறுவனங்கள், மீடியா, மற்றும் வைத்தியசாலை போன்றன அழைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்வு மாலை 6.30-9.00 மணிவரை தலைவர் றொஷான் கமர்டீன் மற்றும் தவிசாளர் அஷ் ஷெய்ஹ் ஹசன் ஸியாத் தலமையில் நடைபெற்றது. இதில் எமது சேவைகள் பற்றி விளக்கப்பட்டதுடன் எதிர்கால பொதுவான வேலைத்திட்டத்துக்கான முன்மொழிவுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.           

>>>


3. மர்ஹூம்களான M.C.சைனுலாப்தீன் தம்பதிகளின் நினைவாக அவர்களின் குடும்பத்தால் நிலையான தர்மமாக நிர்மாணிக்கப்பட்ட திறந்த அரங்கு அவர்களின் மூன்று புதல்வர்களால் அன்று மாலை மாணவர்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.    

>>>

   

மாற்றுத்திறனாளி குழைந்தைகள், வழர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக எம்முடன் இணைந்திடுங்கள்.


Humanlink Maruthamunai

கடந்த ஏப்ரல் 27ம் திகதி எமது சிறுவர் வளப்படுத்தல் வளாகத்தில் மூன்று வெவ்வேறு நிகழ்வுகள் சிறப்புற நிறைவுபெற்றன.

ஹியுமன் லின்க் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா 2024

2024-03-16 | admin


எமது மாணவர்களுக்கான விடுதி, தொழுகை மண்டபம் மற்றும் புதிய வகுப்பறை என்பன ISRC நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு 16/03/2024 அன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஜனாப் A.M.அப்துல் லத்தீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள்.

எமது தவிசாளர், செயலாளர், பணிப்பாளர், தற்போதைய மற்றும் முன்னைநாள் நிர்வாக மற்றும் பொது குழு உறுப்பினர்கள் மற்றும் சில அதிதிகளும் கலந்துகொண்டனர்.


நிகழ்வில் அகால மரணமடைந்த எமது இரண்டு பழைய மாணவர்களுக்காக சுய-பிராத்தனைகளும் இடம்பெற்றன. இக்கட்டடங்களும், நிர்வாகமும், மாணவர் வளப்படுத்தல் வளாகமும் உங்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை வளப்படுத்தவே. 

உங்கள் குழந்தைகளை அழைத்து வாருங்கள், வழங்கப்படும் சேவைகளை கண்கூடாக கண்டு உங்கள் பிள்ளைகளையும் முடியுமான வகுப்பறையில் சேர்த்து அவர்களையும் இறைவனின் அருள்கொண்டு வளப்படுத்திடுங்கள் பெற்றோர்களே!

ஹியுமன் லின்க் நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா 2024

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால், அவர்களின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் எமது ஒரு தொகுதி மாணவர்களுக்கு 06/03/2024 வழங்கப்பட்டன.

2024-03-06 | admin


இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால், அவர்களின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் எமது ஒரு தொகுதி மாணவர்களுக்கு 06/03/2024 வழங்கப்பட்டன. இதில் அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சில நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன.  


இதில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ் M.S.M. றஸ்ஸான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட மற்றும் இறக்காமம் சமூக சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


இந்நிகழ்வின் பின்னர் இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஹியுமன் லின்க் நிலையத்துக்கும் வருகை தந்து எமது செயற்பாடுகளையும் அவதானித்து திருப்தியடைந்தனர்.

இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால், அவர்களின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் எமது ஒரு தொகுதி மாணவர்களுக்கு 06/03/2024 வழங்கப்பட்டன.

76வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஹியுமன் லின்க் நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்நதன.

2024-02-04 | admin


எமது தாய் திருநாட்டின் 76வது சுதந்திர தினத்தை கௌரவித்து நினைவுகூருமுகமாக சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலை 9 மணிமுதல் எமது பொருளாளர் M.M.நஸ்மி தலைமையில் நடைபெற்றது.

>>>

இதில் பிரதம அதிதியாக மாவட்ட வைத்திய அதிகாரியும் எமது பொதுச்சபை உறுப்பினருமான அல்ஹாஜ் Dr.A.L.M.மிஹ்ழார் கலந்துகொண்டு  தேசியக்கொடி ஏற்றி  சிறப்பித்ததுடன் இந்நிகழ்வில் எமது பொதுச்சபை, நிர்வாக குழு உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர்.

>>>

மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் மரநடுகை நிகழ்வுகளும் இன்றய சுந்தந்திரத்தின வைபவத்தை  அலங்கரித்தன.

76வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஹியுமன் லின்க் நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்நதன.

ஆரம்ப வைத்திய சுகாதார செயல்முறை தொடர்பான விசேட பயிற்சி

2024-01-28 | admin


நைட்டா (NAITA) நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஹியுமன் லின்க் வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற விசேடதேவை உடைய மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் பராமரிப்பு சேவையினை நிறைவேற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆரம்ப வைத்திய சுகாதார செயல்முறை தொடர்பான பயிற்சிகள் இன்று 26.01 2024  காலை 9.30 மணி தொடக்கம் 11 மணி வரை ஹியுமன் லின்க் நிலையத்தில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரிகின்ற தாதி உத்தியோகத்தர்களான

I.L.Abdul Azeez மற்றும் M.I. Athika அவர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நைட்டா நிறுவனத்தின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் A.M.M.Riyas  அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

பயிற்சி நெறியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தாதி உத்தியோகத்தர்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய மருதமுனை பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பாளர் மாவட்ட வைத்திய அதிகாரி  Al -Haj Dr.A.L.M.Mihlar அவர்களுக்கு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆரம்ப வைத்திய சுகாதார செயல்முறை தொடர்பான விசேட பயிற்சி

ஹியுமன் லின்க் நிறுவனத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் செயற்குழு உறுப்பினர் தெரிவும்.

2023-12-30 | admin


ஹியுமன் லின்க் வருடாந்த பொதுக் கூட்டமானது கடந்த 2023.12.30ம் திகதி அன்று கல்முனை SLR உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இக் கூட்டமானது ஸ்தாபகத்தலைவர் KM.Roshan அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந் நிகழ்விற்கு 40க்கு மேற்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் நேரடியாகவும் பங்கு கொள்ள முடியாத வெளிநாடுகளில் வசிக்கின்ற உறுப்பினர்கள் ஆன்லைன் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர் . இந்நிகழ்வின்  போது  மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாடு, நடனம் சைகை மொழி பேச்சு கைத்தொழில் முயற்சி மற்றும் சித்திரம் வரைதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவிக்கபட்டது. இறுதியாக நிகழ்வின் பிரதான அம்சமான 2024ம் ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர் தெரிவு ஸ்தாபகத்தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றதுடன்  பகல் போசனத்தடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது

ஹியுமன் லின்க் நிறுவனத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் செயற்குழு உறுப்பினர் தெரிவும்.

Human Link Walk December 2023

2023-12-06 | Admin


"சர்வதேச மாற்றித்திறனாளிகளுக்கான தினம் - 2023"  முன்னிட்டு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வீதி ஊர்வலம் இன்று (05.12.2023) மருதமுனையில் நடைபெற்றது.

Human Link Walk December 2023

A series of 10 training programs were carried out in the month of August

2020-09-25 | Admin


A series of 10 training programs were carried out in the month of August by the experienced and professional therapists for our Health Care Center Staff who will assist the main therapists during the actual assessment and treatments in future. In Shaa Allah

A series of 10 training programs were carried out in the month of August

We carried out an awareness program

2020-09-25 | Admin


We carried out an awareness program today (24/09/2020) among vulnerable and differently abled audience attached to Navithanveli DS office.

We carried out an awareness program

எமது வளப்படுத்தல் நிலையத்தில் மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகளும், உபகரணங்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகளும்

2020-09-23 | Admin


சாய்ந்தமருது PEARLS அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது AASIF SHOWROOM மற்றும் STAR PLACE உரிமையாளர்கள் இணைந்து எமது  வளப்படுத்தல் நிலையத்தில் மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகளும், உபகரணங்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகளும்  23/09/2020 புதன்கிழமை இனிதாக நிறைவேறியது. அல்ஹம்டுலில்லாஹ்.

இந்நிகழ்வுகள் பிறை FM கட்டுப்பாட்டாளர் அல்ஹாஜ் பஸீர் அப்துல் கையூம் அவர்களால்  நேரடியாக ஒலிபரப்பப்பட்டதுடன், அவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

எமது  வளப்படுத்தல் நிலையத்தில் மாணவர்களுக்கான ஆக்கத்திறன் போட்டிகளும், உபகரணங்கள் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகளும்

திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

2020-09-10 | Admin


திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (10/09/2020)  அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வனே நடந்தேறியது. எமது  அனுபவங்களும் வழிகாட்டல்களும்,  சேவைகளும் அவர்களுக்காக என்றுமே  காத்திருக்கின்றது என்ற செய்தியும் எமது குழுவால் எத்தி வைக்கப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

திருக்கோவில் பிரதேச செயலகத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட 100 இக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

Our parents visited brand new Human Link Health Care Center [HL- HCC] and understood the additional therapy services that their children are going to get from October 2020, onward.

2020-09-08 | Admin


Our parents visited brand new Human Link Health Care Center [HL- HCC] and understood the additional therapy services that their children are going to get from October 2020, onward.

...

List of professional, experienced  and registered therapy team will be displayed very soon in our platforms [when our health care center begins its official functions in October, 2020].

Note >

Images show our internal therapy assistants who will assist the professional therapists during the actual assessment and treatment period. Images were taken to create awareness but they were not actual treatments.

Our parents visited brand new Human Link Health Care Center [HL- HCC] and understood the additional therapy services that their children are going to get from October 2020, onward.

Our home gardening initiative had good harvest. Al Hamdulillah!

2020-09-07 | Admin


Our home gardening initiative had good harvest. Al Hamdulillah!

Our home gardening initiative had good harvest. Al Hamdulillah!