ஆரம்ப வைத்திய சுகாதார செயல்முறை தொடர்பான விசேட பயிற்சி
2024-01-28 | admin
நைட்டா (NAITA) நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக ஹியுமன் லின்க் வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்ற விசேடதேவை உடைய மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் பராமரிப்பு சேவையினை நிறைவேற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆரம்ப வைத்திய சுகாதார செயல்முறை தொடர்பான பயிற்சிகள் இன்று 26.01 2024 காலை 9.30 மணி தொடக்கம் 11 மணி வரை ஹியுமன் லின்க் நிலையத்தில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் கடமை புரிகின்ற தாதி உத்தியோகத்தர்களான
I.L.Abdul Azeez மற்றும் M.I. Athika அவர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நைட்டா நிறுவனத்தின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் A.M.M.Riyas அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
பயிற்சி நெறியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தாதி உத்தியோகத்தர்களை வழங்கி ஒத்துழைப்பு நல்கிய மருதமுனை பிரதேச வைத்திய சாலையின் பொறுப்பாளர் மாவட்ட வைத்திய அதிகாரி Al -Haj Dr.A.L.M.Mihlar அவர்களுக்கு நிறுவனம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.