இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால், அவர்களின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் எமது ஒரு தொகுதி மாணவர்களுக்கு 06/03/2024 வழங்கப்பட்டன.
2024-03-06 | admin
இறக்காமம் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால், அவர்களின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் கற்றல் உபகரணங்கள் எமது ஒரு தொகுதி மாணவர்களுக்கு 06/03/2024 வழங்கப்பட்டன. இதில் அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சில நிறுவனங்கள் அழைக்கப்பட்டிருந்தன.
இதில் இறக்காமம் பிரதேச செயலாளர் அஷ் M.S.M. றஸ்ஸான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட மற்றும் இறக்காமம் சமூக சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பின்னர் இலங்கை மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் உத்தியோகத்தர்கள் ஹியுமன் லின்க் நிலையத்துக்கும் வருகை தந்து எமது செயற்பாடுகளையும் அவதானித்து திருப்தியடைந்தனர்.